Friday, March 13, 2009

மொக்கைகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா!

எங்க ஆத்தா, அலமேலு, பொன்னாத்தா..."யக்கோவ்....நம்ம ஏரியா பக்கம் வந்துகினு போறியா,கொஞ்சம் விவகாரம் இருக்கு" அப்பிடின்னு பின்னுட்டம் போட்டப்பவே இது கொஞ்சம் விவகாரம் இல்ல பெரிய விவகாரம்ன்னு, மனசுல மணி அடிச்சது.

ஆலயமணி இல்லிங்க, இது கிலில அடிக்கிற அலார மணி. கிடு கிடுனு போய் பார்த்தா...ஆப்பு அழகாக வைக்கப் பட்டிருந்தது. இது தான் "Passing the ஆப்பா" ?(ஆங்கிலத்துல Passing the Buckன்னு சொல்ற மாதிரி. சண்டக்கோழிக்கிட்ட் சாக்கிரதையா இருக்கணும்ப்பா..)

தொடர் பதிவு போடச் சொன்ன, தங்கமான பொன்னாத்தா!
என்னியெல்லாம் ஒரு ஆளா மதிச்சுக் கூப்பிடத்துக்கு நெம்ப நெம்ப ஸந்தோஸம்!(அவ்வ்வ்..)

மொக்கையா என்ன எழுதலாம்னு...ரொம்ப சிந்திச்சேன்,..ரொம்ப ரொம்ப சிந்திச்சேன், கார் ஓட்டறப்ப் ,..கடிப் போட்ட மீட்டிங்க் நடுவுல,..படுத்துட்டு யோசிச்சேன்,..உட்கார்ந்துட்டு யோசிச்சேன்.

அப்பத் தான் ஒரு உண்மை எனக்கு தோணுச்சு,..என்னையப் பத்தின உண்மை.

நான் வாய தொறந்தா மூடாத கோஷ்டி. இல்ல,..இல்ல.. கோஷ்டிக்குத் தலைவி! :))

என் கதைய சலிக்காம கேட்கற ஒரே ஆளு...என் ஆளு :) ம் ம்ன்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு. (ஆனா நான் சொன்னத திருப்பிச் சொல்லச் சொன்னா,..இஹி இஹின்னு சிரிச்சு மழுப்பிடுவாரு)


அது ஏனோ தெரில, என்ன மாயமோ புரில,
நம்ம பேச்சக் கேட்கற மத்தவைங்க்கெல்லாம் "ஆத்தாடி இது என்ன கலி காலக் கொடுமைன்னு." எஸ் ஆகிருவாங்க :((

போறாங்க போங்க...ஞானிகளின் பேச்சு சாமானியர்களுக்கு புரியாதது தான் (ஆமா,..இப்படியே.. நானே என்னைய உசுப்பேதிக்க வேண்டியது தான் :))

நாமா, இதுக்கெல்லாம் அஞ்சினவங்களா..சொல்லுங்க? சரி, அப்ப நாமளே சீர்யஸா எதையாவது போட்டு விடுவோம்னு நினைச்சப்பா தான் இன்னைக்கு வெள்ளிக் கிழமை ஆனந்த விகடன் வந்திருக்குமேன்னு ஞாபகம் வந்திடுச்சு.

விகடன்ல "டேக் ஓ.கே"ன்னு ஒரு மரணக்கடியா கிஷோர்ன்னு ஒரு கொசு போடுற மொக்கைய விட டபுள் ஸ்ட்ராங்க் இன்ன வரைக்கும் நான் பாக்கலைங்க,..படிக்கலைங்க... அதனால, நான் சொன்னேன்னு விகடன் போய் படிங்க,..சத்தியமா திருப்பி விகடன படிக்க மாட்டீங்க. அப்படி ஒரு கடி!

சரி,..சரி டைம் ஆச்சு. பொன்னத்தா மாதிரி ஒரு மொக்கை கவிஜப் போட்டு முடிக்கிறேங்க (தொண்ட வலின்னு NYQUIL குடிச்சேன் மப்பா இருக்கு)

இன்னா கவிஜ போடலம்?..ம்ம்ம்

ஆங்,..ஆப்பு...மப்பு..
டி.ஆர் மாதிரி மன்னிச்சுக்கோங்க விஜய டி.ஆர் மாதிரி ஒரு கவிஜச் சொல்றேன். (அடுக்கு மொழிக் கவிதை)

அய்யோ,..பாவம்!
(யாரன்னு சொல்றீங்கள..உங்களத்தான் :)) ஹி ஹி )

ஹியர் க்ம்ஸ் த கவிஜ

பொன்னாத்தா Blogல வைச்சாங்க ஆப்பு!
NYQUIL குடிச்சா வரும் மப்பு!
சின்ன வயசுல வச்சு விளையாடினேன் சொப்பு!
அரியர்ஸ்க்கு இன்னொரு பெயரு கப்பு!
Jeansல வச்சாங்க ஜிப்பு!

ரோட் சைட் ரோமியோ தேடுறது பிக்கப்பு!
இவங்களுக்கு நம்மூர்ல இருக்குது லாக்க்ப்பு!
எங்க அப்பாவுக்கு பிடிச்ச பூ குஷ்பூ!
குஷ்பூ கருத்துச் சொன்ன விஷயம் கற்பு!
அதுக்கு கிடைத்தது நல்ல ஆப்பு!

(எப்படி ஆப்பிலேத் தொடங்கி,..ஆப்பிலே முடிச்சிருக்கேன் பாருங்க. சே! கலக்குறேன்ல...என்னவோ தெரிலங்க கடவுள் என்னைய இப்படி சுப்பர்ர்ராப் படைச்சிட்டாரு)

மொக்கை கவி முடிஞ்சாட்ச்சு,...அடுத்து நான் மொக்க போட அழைப்பது

மத்திய மூளையில இருந்து யோசிக்கும் என் கல்லூரித் தோழர் வாசன்
மற்றும் http://vsvasan.blogspot.com/

புதுசா வலையுலகுக்கு மிக ஆர்வத்துடன் பிரவேசித்திருக்கும் இனியப் பள்ளிக் காலத் தோழி பொற்கொடி http://www.nithru.blogspot.com/

வருக! வருக!,.வந்து மொக்கையப் போட்டு ஜோதியில் ஐக்கியமாகவும்!!!