Monday, October 11, 2010

கடவுளை எழுப்புதல்!

ஓரு கட்டுபாடற்ற மாய உலகில்,...
முடிவிலியில்,...
அதிவேகமாய்,...
முழுமூச்சுடன்,..
பரபரவென பற்றியெரியும் தீக்கொழுந்து போல
என்னை நான் அதிகமாய் நேசிக்கத் தொடங்குகிறேன்,...
சுய நலமின்றி
இனி என் இன்ப துன்பங்களின் சாளரங்கள்
பிறர்க்காய் திறக்கும்...!

Wednesday, February 24, 2010

உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக............

உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக.....................................
அப்படின்னு உங்களுக்கெல்லாம் ஒரு சேதி சொல்ல ஆசை.

வேறொண்ணுமில்லீங்க நம்ம சன் டீவில செஃப் ஜேக்கப் வழங்குற "ஆகா, என்ன ருசி"ன்னு ஒரு சமையல் நிகழ்ச்சியில நான் லோக்கல் கிச்சன்ங்கற பகுதில மூணு ஷோ பண்ணிருக்கேன்.

அதுல முதல் ஷோ இந்த வாரம் ஒளிப்பரப்பாகுது (Feb 27, Saturday 1.00 P.M.). மறக்காம பாருங்க.

செஃப் ஜேக்கப் சொதப்பல் ஷாட்ஸ்ன்னு நிகழ்ச்சி கடைசில போடுவாரு. எனக்கு மட்டும் அது கிடையாது, ஏன்னா மொத்தமாவே என் ஷோ அப்படித்தான் இருக்கும்.சரி, இப்ப உங்களுல எத்தனை பேரு "சாமி அன்னைக்கு கரண்ட் கட்டாகணும்னு வேண்டுறீங்களோ தெரில!" :-).

கரண்ட் கட்டாகதவங்களுக்கு வேற வழியில்ல. தலையெழுத்த மாத்தமுடியுமா சொல்லுங்க. :-p :-))

அப்போ நான் வாரேன்ன்ன்ன்ன்....

Saturday, February 20, 2010

காதல்,...

காதல் பத்தி எழுதனுமுனு ரொம்பா நாளா ஆசை,...
என்னவோ சரியான தருணமோ, அதற்கான ஒரு மன நிலையோ அமையாத நிலையில் இப்போ காதல கொண்டாடற இந்தக் குட்டி மாதத்துல, காதலர்களும், காவலர்களும் மட்டும் விழித்துக் கிடக்கும்,
ஒரு முன் பனி பெய்யும் பொழுதுல இந்த பதிவ எழுதுறேன்....

காதல பத்தி நான் அறிஞ்சத, புரிஞ்சத சொல்றேன்,....கொஞ்சமா


"காதல்ன்னா என்னம்மான்னு?" என் தங்கை அம்மா கிட்டக் கேட்டா தோட்டாத்தில பூச்செடிக்கெல்லாம் நீர் பாய்ச்சிக்கிட்டே,...பதின்வயசுல அந்தக் கேள்வி யாரையும் திடுக்கிட்டிருக்கும், ஆனா அப்படி எதுவுமே இல்லாமா அம்மா சொன்னாங்க "காதல்ங்கறது நிறையா பாசம், அன்பு"ன்னு

காதல்ங்கறது இனகவர்ச்சிய தாண்டிய அன்புங்கறத ரொம்ப எளிமையா சொல்லிட்டாங்கல. மாடில இவங்க சம்பாஷணை கேட்ட(ஒட்டுக் கேட்ட) நினைவு இன்னும் பதிந்துக் கிடக்கு பசுமையாய்.

என்னவோ தெரில, காவியங்களும், கதைகளும் காதலுக்காக உயிர் துறந்த காதலர்களைத் தான் கொண்டாடுகிறது. சினிமாவுல கூட காதலர்கள் கை சேர்ந்தப் பின், எல்லாரும் குடும்பமா ஹா ஹான்னு சிரிச்சு ஒரு ஸ்டில் புகைப்படத்தோட "வணக்கம்" போட்டுறாங்க.

என்கென்னவோ, மெய்ன் பிக்சரே அதுக்குப்பின் தான் ஆரம்பம்ன்னு தோணுது. கண்ணால பேசுறது(இன்னும் இது வழக்குல இருக்கா??), படப்படப்பா தவிக்கிறது, கை பட்டுட்டா சிலிர்க்கிறது, செல்லச்சண்டை போடுறது எல்லாம் சும்மா ட்ரைலர்.

இருந்தாலும் சில பேருக்கு அந்த ட்ரைலர் செம நச்சின்னு அமைஞ்சு போகுது.
அப்போ
அருவியா கொட்டற வசனங்களும்,....
வார்த்தைகள் எட்டாமல் முட்டும் அந்த கவிதைகளும்,....
கலர் கலராய் (அவதார் படம் தோத்திடும் போங்க) தோணும் கனவுகளும்...
காதலர்களுக்கு மாயாஜால உலகை கையில கொண்டு வந்திருது.

சும்மாவா சொன்னார் வைரமுத்து வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு FANTASYன்னு.

இதுல எனக்கு மிகவும் பிடித்தவங்க ஒரு தலை காதலர்கள் தான்! சொல்லாம தவித்து, மென்னு, முழுங்கி, கனவுல உழன்று, நினைவு வெளில திரிந்து, "பிடிக்குமா" "பிடிக்காதா"ன்னு பித்துப் பிடித்து அலைந்து, சிலசமயம் காலம் தாழ்த்தினாதால கைச்சேராமப் போய், கலங்கி, சோர்ந்து ஆனாலும் அப்பவும் சிரிச்சிக்கிட்டே "கங்கிராட்ஸ்" சொல்லும் ஒரு அழகு, அற்புத மனிதர்கள்.

சரி,..இன்னும் விரிவா காதல, எனக்கு தெரிந்த சில காதல் கதைகள இன்னொரு ஒரு பதிவுல.

இந்த பகுதில எனக்குப் பிடித்த சில அழகுக் கவிதைகள் தாரேன்,.. இவங்கள்ள பல பேர உங்களுக்கு அறிமுகப்படுத்தறதுல எனக்கு சந்தோஷம். தபு சங்கரோ, தாமரையோ இல்ல,..ஆனா அவங்களுக்கு இவங்க சளைச்சவங்க இல்ல. படிச்சுத்தான் பாருங்களேன்.

"என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................"
- புதியவன்
http://puthiyavanonline.blogspot.com/2009/06/blog-post.html


"பிடித்தப் பாடலும்
வாத்தியங்களின் சத்தமாய்;
அடுத்த வீட்டுக்குழந்தை
அழுகையின் உச்சமாய்;
கண்மூடும் நேரம்
இமைகளும் முட்களாய்;
நாளேடுகளின்
விரும்பாத செய்தியாய்;
உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!"
- ஸ்ரீமதி
http://karaiyoorakanavugal.blogspot.com/2009/03/blog-post_16.html


"நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா.."
- சரவணக்குமார்
http://msaravanakumar.blogspot.com/2008/09/blog-post_07.html


"பனிரெண்டு மணி தாண்டி
அரைத்தூக்கத்தில் வாழ்த்துச்
சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில்
நான் தூங்குவதே இல்லை என்பதை
உன்னிடம் எப்படி சொல்வது"
- ச.பிரேம்குமார்
http://premkumarpec.blogspot.com/
நீயில்லா நாட்களை
புகைப்படங்களும்
குறுஞ்செய்திகளும்
நிரப்புகின்றன...
நானில்லா உன் நாட்களை
எவை நிரப்புகின்றன?
- புனிதா
http://ninaivellam.blogspot.com/2009/06/ii_15.html

சரி நானும் ஒரு கவிதை சொல்றேன் கேட்டுத்தான் ஆகணும்.


உனக்காய் காத்திருந்து
அலுத்து, சலித்து, கோபித்து
பல வாறு சொல்லித் திட்ட பழகி
கொஞ்சமாய் அழுது
தலையணை நனைத்து, உறங்கி
நீ
வந்தவுடன் கேட்டேன்
"சாப்பிடீங்களா..."

என்ன பிடிச்சிருக்கா,..? பிடிக்கலைன்னாலும் ஓண்ணும் பண்ண முடியாது, அட்ஷட் பண்ணிக்கோங்க :))

அப்போ வ்ர்ர்ர்ட்டா,..அடுத்த பதிவுல சந்திப்போம்,..
காதலை, காதலர்களை வரையறை இல்லாமல்
காதலிக்கும்
உங்கள் சினேகிதி