Sunday, May 20, 2012

கெளரதையும், அதைக் காதல் செய்தவளும்...!


ஆத்தாளுக்கு...
தென்னமரக்குடியெண்ணை!

அய்யனுக்கு...
டீக்கடை பாக்கிப்பணம்!

அக்காளுக்கு...
மச்சான் வாங்கி தராத சிவப்பு வளவி!


அவ பெத்த மகராசனுக்கு...
பிசுபிசுக்கும் பப்பர மிட்டாய்!

பீடி சுத்திய சம்பளக் காசில்,
கச்சிதமாய் கணக்குப் போட்டவள்...

ஒரு கிலோ சீனி மிட்டாயும், சேவும் வாங்க
ஒடிக் கொண்டிருந்தாள்...

பக்கத்து வீட்டுச் செல்வி வழியில்
“ஏ புள்ள டவுனலேர்ந்து, உன் மாமன் வந்துருக்குன்னுச் சொல்லக் கேட்டு

ஐ.டி.ஐ படித்து விட்டு, ஐ.ஐ.டி படித்தது போல
இவளைக் கட்டிக்க மறுத்த அந்த கெளரதை மாமனுக்கு...!!!

Tuesday, May 15, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 2


பாட்டி வீட்டுக்கு வரும் போதே ரோட்ல போஸ்டரேல்லாம் பார்த்து என்ன படம் போலாம்னு ஒரு மாதிரி முடிவு பண்ணிட்டுத் தான் வந்துருப்பாங்க.

பாட்டிக்கு அழுவாச்சி படம் பிடிக்காது போல, 5 ருபாய் வாங்கிட்டு 10 ரூபாய்க்கு நடிக்கிற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படமெல்லாம் சாய்சஸ்ல விட்டுட்டு அவங்க டிக் பண்றது வேற யாரு நம்ம தங்கத் தலைவர் பொன்மனச் செம்மல் வாத்தியார் படம் தான்.

எனக்கு எம்.ஜி.ஆர், சிவாஜின்னு எல்லாம் சொல்லத் தெரியாது மாத்தி மாத்தி தப்புத் தப்பா சொல்லுவேன். என்னையப் பொறுத்த வரைக்கும் அது கலர் படமில்ல அவ்வளவு தான்.

அம்மா சின்ன வயசுல வளர்ரப்போ, அவங்க அம்மா( அம்மா பாட்டி) ரொம்பா ஸ்டிரிக்ட்டாம். அம்மா சினிமாவே பார்த்தில்லையாம். அதனால, கல்யாணத்துக்கப்பறம் அம்மா பார்க்காத படமெல்லாம் பார்த்து “காட்ச் சப் (Catch Up) பண்ணுவாங்க. அப்படி பழைய சினிமாப்படம் போகுபோதெல்லாம் என்னையக் கூப்பிட்டா “புலி பசிச்சாலும் புல்லத் திங்காது மாதிரி தெனாவெட்டா முடியாதுன்னு சொல்லிருவேன். 

அவங்களும் விட்டது தொல்லைன்னு அம்மா பாட்டி வீட்ல விட்டுட்டு போய்டுவாங்க. நானும் பாட்டி மதியம் தூங்கினப்பறம் ஜாலியா தெருப் பசங்க பம்பரம் விடறத,, கோலி விளையாடுறத பார்க்கப் போய்டுவேன். (வேக்கேஷன் டைம்ல பாட்டி வீட்ல தான இருப்போம்).

அப்படி வேக்கேஷன் இல்லாத சில சமயத்துல என்ன யார் வீட்லயும் விடமுடியாத சூழ்நிலைல தான், நான் அழ, அழ சில நேரம்  அடிச்செல்லாம் பழையப் படத்துக்குக் கூட்டிடுப் போய்ருக்காங்க. ரிமம்பர்...புலி பசிச்சாலும் புல்லத் திங்காது.

ஆனா அப்படியாப்பட்ட இந்த புலிய(நான் தாங்க...ஹி ஹி) ஒரு தடவ வார்த்தை விளையாட்டு விளையாடி “புல்லா ஏமாத்திக் கூட்டிட்டு போனாங்க. எப்படியா...

நான் தான் கேள்வியின் நாயகியாட்ச்சே. சின்ன வயசுல சில கேள்விகள் ஸ்டண்டர்டா வச்சிருப்பேன்.
உ.தா. யாராவது விருந்தாளிங்க வீட்டுக்கு தங்கற மாதிரி வந்த. நல்லா அவங்க கொண்டு வந்த ஆப்பிள், ஜூஸ்பெர்ரி, பிஸ்கெட்டெல்லாம் முன்ன பின்ன பார்க்காத மாதிரி, சாப்பிடாத மாதிரி, மொக்கு மொக்குன்னு மொக்கிட்டு அவங்க கிட்ட ரொம்ப சந்தோஷமா “நீங்க எப்போ ஊருக்கு போறீங்க்ன்னு கேட்பேன்.

அவங்க டெரர் ஆகி எங்க அம்மாவ நல்லா வளர்த்து வைச்சுருக்கீங்க பிள்ளையன்னு பார்ப்பாங்க. நான் ஏன் அப்படி கேட்பன்னா, வந்தவங்க நிறையா நாள் வீட்ல இருக்கனும்னு எனக்கு ஆசை. ஒரு வேளை சீக்கிரமாப் போறாங்கன்னா. “போகாதீங்க போகாதீங்க, ப்ளீஸ் ப்ளீஸ்ன்னு கெஞ்சுவேன். இரண்டு நாள் இருக்காங்கன்னா அதுக்கு ஏற்ற மாதிரி என் ஈவ்னிங் விளையாட்டுப் பிளான் போட்டு வச்சுப்பேன். 
இத எங்கம்மா விளக்கு விளக்குன்னு சபீனா போட்டு விருந்தாளிங்கக் கிட்ட விளக்கறதுக்குள்ள ஒரு வழியாகிருவாங்க.

அதே மாதிரி சினிமாவுக்கு வான்னு கூப்பிட்டா நான் கேட்கற முதல் கேள்வி “கலர் படமா ? பிளாக் & ஒய்ட்டா?” அப்படி ஒரு தடவக் கேட்டக் கேள்விக்கு சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமான்னு முருக பெருமான்னு ரேஞ்சுக்கு எங்கம்மா ““பச்சை விளக்கு””ன்னு சொல்லி என்னைய கன்ஃபுயூஸ் ஆக்கிக் கூப்பிட்டுப் போய்ட்டாங்க. 

ஆனா, எனக்கோ ஒரே டவுட்டு அம்மாவோட “எக்ஸ்பிரஷன்ல ஏதோ என்னைய ஏமாத்தின மாதிரி ஒரு “ஃபீல் இருந்தது. போற வழியேல்லாம் நான் போஸ்டரப் பார்த்தாவதுக் கண்டுபிடிக்கலாம்னு கண்ண மேயவிட்டுட்டேப் போனா... பிளாக் & ஓயிட் படப்போஸ்டர படுபாவிங்க சிவப்பு, மஞ்சள், பச்சை கலரக் கொடுத்து இன்னும் கன்ஃபுஸ் பண்ணி வச்சிருந்தாங்க.

பாதி வழில போஸ்டர்ல எம்.ஜி.ஆர் இருக்காரு (நமக்கு தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் விவரம் தெரியாதே) நான் வரலன்னு “ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கு இன்னொரு படப்போஸ்டரக் காட்டி அம்மா சமாதனம் பண்ணங்க. 

அது, இதுக்கு மேல கன்ஃபுஸன். ஆமாங்க, நடிகர் திலகம் சும்மா இல்லாம “வாழ்க்கை அது இதுன்னு அந்தக் கால கனவுக்கன்னிகள் அம்பிகா ராதாக் கூடெல்லாம் நடிச்சிட்டுருந்த டைம். அதுல ஒரு போஸ்டரத் தான் அம்மா காண்பிச்சாங்க. 

சரி என்ன தான் ஆவுதுன்னு போய் தியேட்டர்ல உட்கார்ந்தா,... நல்லா பிளாக் & ஓய்ட்ல, செவாலியர் சிவாஜி இஞ்சின்ல கரிய அள்ளி அள்ளிப் போட்டுக்கிட்டு பாட்டுப் பாடிக்கிட்டு வராரு.


படமும்  அழுகை,..நானும் இங்க செம அழுகை.

நம்பிக்கைத் துரோகத்தோட வலி இருக்கே...அப்பப்பப்பா...நெஞ்சு அடைச்சு, விம்மி, விம்மி, கண்ல தண்ணீர் கோர்த்து, விக்கி விக்கி இப்படி ஏமாந்து போய்ட்டோமேன்னு அழுதா. அதக் கண்டும் காணமலும் இந்த அம்மாமார்களேல்லாம் நடிகையர் திலகம் சாவித்திரியே நோட்ஸ் எடுத்துக்கற ரேஞ்சுக்கு ஒரு ஆக்டிங் கொடுப்பாங்களே.....அடடடடா,...தாங்காது...(நம்ம சின்ன மனசும் தான்)

ஆக,...இப்படியாப்பட்ட, அப்படியாப்பட்ட புலி பாட்டிக் கூட பிளாக் & ஒயிட் இதயக்கனி வாத்தியார் படம் பார்க்க ரெடியாகிட்டு இருக்கும்...

    -       அடுத்த பதிவுல பாட்டிக் கூட படம் பார்க்கலாம்....ம்ம் சரியா..

Thursday, May 10, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 1


சினிமாவும் நானும் பகுதி எழுதனும்னு நினைச்சவுடனயே எனக்கு கெக்கபிக்கேன்னு சிரிப்பு தான் வந்துச்சு. அப்பறம் நான் பெரிய பாலசந்தர், பாலுமகேந்திரா என்னுடைய சினிமா அனுபவங்கள தொகுத்து வழங்கறதுக்கு... ஆனாலும் சொல்லுவேன் J உங்களுக்கு பிடிக்குமென்ற நம்பிக்கையில்...( நம்பிக்கைய விட நப்பாசை தான் சரியான வார்த்தை J)

சரி எல்லாரும் மேல பாருங்க...ஸ்ஸொய்ங்... ஸ்ஸொய்ங்...(ஃப்ளேஷ்பேக் அது இல்லாமா சினிமாவா..J)... 

இல்லைனா இந்த படத்தப் பாருங்க (படத்தப் பார்த்து தலைய சுத்தி வயத்தப் புரட்டினா நான் பொறுப்பில்லப்பா)

அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு...சும்மா நாலுன்னு வச்சிக்கோங்களேன். கிராமத்தில இருந்து எங்க பாட்டி அதாவது என் அப்பாவை பெற்ற அம்மா வருவாங்க. “அப்பத்தான்னு தான் கூப்பிடனும் நான் ரொம்ப ஒல்ட் ஃபேஷனாருக்குன்னு பாட்டி தான் கூப்பிடுவேன். 

இப்ப நடிகர் சூர்யா விஜய் டிவில அவங்க பாட்டிய “ஆத்தான்னு கூப்பிடுவேன்னு ஸ்டைலா சொல்றப்ப தான் தோணுது மிஸ் பண்ணிட்டோமோன்னு. 

அந்த பாட்டி வீட்டுக்கு வந்தா எனக்கு செம ஜாலி பல காரணங்களுக்காக

1.       பாட்டி ஒடம்பெல்லாம் ஒரே டாட்டூஸ். எனக்கு அத ஆராய்ச்சி பண்ணிரது ஒரு பெரிய பொழுது போக்கு. அவங்க காது வளர்த்து பெரிய தண்டட்டி போட்டு, காதெல்லாம் பல இடங்கள குத்தி “கொப்பு, “முறுகுன்னு அழகழகான பேருடைய பல நகைகள் காதுல போட்டிடுப்பாங்க. நல்ல ஒல்லியா, உயரமா, இடுப்புக்கு கீழே விழற தல முடிய கோடாலிக் கொண்டப் போட்டுக்கிட்டு சரியா “அத்லெடிக் பில்ட்டா இருப்பாங்க...சங்கத் தமிழ் பெண்கள் முறத்தால புலிய விரட்டினது உண்மையின்னு அவங்களப் பார்த்தா 100% நம்பலாம்.கிட்டத்தட்ட அவங்க எனக்கு ம்யூசியம் மாதிரி. அவங்கள சும்மா வளைச்சு, வளைச்சு தொட்டு தொட்டுப் பார்த்து, கேள்வி மேல கேள்வி கேட்டு ஆராய்ச்சி பண்ணுவேன்.       2. அடுத்த காரணம் வித்தியாசமான கிராமத்துக் கதை சொல்லுவாங்க. எந்த குழந்தைங்க புத்தகத்திலயும் வரதா,..வர முடியாத சமூக நீதிக் கதைகள். உ.தா. ராசாவுக்கு துரோகம் பண்ணின ராணி. அதக் கண்டுபிடிச்ச மந்திரி...இப்படி J

3   3. பேத்தின்னு பார்க்கமா என்னை ரொம்ப வம்பிழுப்பாங்க. சினிமா தமிழ்ல சொல்லனும்னா கலாய்ப்பாங்க..
  4.ஆனா இதெல்லாம் விட அவங்க வரவ நான் ரொம்ப எதிர்பார்த்துக் கிடக்கிரது எதுக்கு தெரியுமா...சினிமா...:-) (அப்பாடா,..டாப்பிக்கிக்கு வந்துட்டேனா..J )

   பாட்டிக்கு நான் தான் சினிமா கம்பேனியன். அதுவும் செக்ண்ட் ஷோ தான் போவோம். அதுக்காகவே,..தூங்காம முழிச்சிருப்பேன். பாட்டி சாப்பிட்டு முடிச்சு, வெத்தலப் போட்டு அப்பாக் கிட்ட எல்லாக் கதையும் பேசி ஒரு மாதிரி ட்ன் ஃபோர் த டே (Done For The Day) ஆகும் போது பாட்டி சினிமா போக ரெடியாவாங்க. அவங்க பின்னாலயே திரிவேன். எங்க விட்டுட்டுக்கிட்டுட்டுப் போய்ட்டாங்கன்னா. அம்மாவும் எப்படின்னு தெரில என்னைய ஓண்ணும் சொல்லாம அவங்க கூட அனுப்பி வைச்சிருவாங்க.

   ஆனா இதுல ஒரே ஒரு பிராப்பளம் பாட்டி லைக்ஸ் ஒன்லி பிளாக் & ஓயிட் மூவீஸ். நான் கலர் படம் மட்டும் தான் பார்ப்பேன். 

   “நாம தான் ஃபிரியாக் கொடுத்த ஃபினாயிலக் கூடக் குடிப்போம்லா J... இப்படி சொல்வேன்னு நினைக்காதீங்க. 
   
 பாட்டி கூட சினிமா போற அனுபவம் ரொம்பவும் அலாதியானது. அதுக்காகத்தான் கண் முழிச்சு காத்திருந்து போவேன்....

   ஏன் அலாதியானதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்...