அது வரை அழுது கொண்டிருந்த இனியாக் குட்டிக்கு
கலர் கலராய் பொம்மைகள் ஆடிய “பேண்ட் எய்டு”
ஒட்டியதும், ஒடிப் போயிருந்தது
முட்டியில் சிராய்த்த வலி...!!!
இது காயத்தை மட்டுமல்ல,
தழும்பினையும் அழகாய் மறைத்து ஆற்றுமாம்..
எல்லாம் தெரிந்திருந்தது குட்டி செல்லத்திற்கு!
“பெரியவங்களுக்கு பொம்மை பேண்ட் எய்டு
இல்லியாம்மா?”
யோசித்தப் படி கேட்டது வாழ்வின் அடுத்த அடி
எடுக்க...
எப்படி சொல்வது...?
பெரிய தாத்தா நெற்றியில் இட்டுருக்கும் திருநீறும்...
மாமா சொல்லும் “எல்லாம் முடியும்” கதைகளும்...
வரன் தகையா டீச்சர் சித்தியின் அனாதை இல்ல பராம்மரிப்பும்..
கைம்பெண் பால்காரம்மாவின் வாஞ்சையும், புன்சிரிப்பும்..
ஏன், நான் வளர்க்கும் பட்டாம் பூச்சி பூந்தோட்டமும் கூட...
வாழ்வு தந்த காயங்களுக்கு போட்டுக் கொண்ட
“கலர்ஃபுல்” பேண்ட் எய்டு என்று!!!
No comments:
Post a Comment
வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்