Wednesday, April 22, 2009

யார் ஹீரோ,..

நல்ல வேளையா,..அன்பு நண்பர் வாசன் அந்த புகைப்படத்தில் இருப்பது யாருன்னு கண்டுபிடிச்சார்...ஏன்னா யாரும் கண்டுபிடிக்காத வரைக்கும் நான் அடுத்த பதிவு போடக்கூடாதுன்னு வச்சிருந்துதேன்..


நான் என்ன சொல்ல வந்தேனா...நாம எவ்வளவு மெனக்கிட்டு சினிமா பிரபலங்களோட வாழ்க்கை வரலாற தெரிஞ்சி வச்சிருக்கோம்,...ஆனா "நான் ஒரே ஒரு கடவுளைத் தான் வணங்குகிறேன்,..அதன் பெயர் அன்பு"ன்னு சொன்ன அந்த பாசாமான தாயைப் பத்தி எத்தனை பேரு தெரிஞ்சி வைச்சிருக்கோம்.



பார்த்திபனின் கிறுக்கல்கள் புத்தகத்துல அன்னையப் பற்றி ஒரு சின்ன கவிதை உண்டு. சரியா ஞாபகம் இல்ல இருந்தாலும் இப்படித் தான் பொருள் பட சொல்லும்

"என்னை மட்டும் கருவில் கொண்டதால் அவள் எனக்கு அன்னை
நீ
அன்பை கருவில் கொண்டதால் உலகிற்கே அன்னை"

உண்மையிலே அவர் கவிதையின் கடைசி வரி முத்தாய்ப்பா முடியும். ஞாபகம் இல்லாததால் அந்த டச் கொண்டு வர முடியல

அன்னை 12 வயதுலேயே ஒரு அழகான கனவு மற்றும் கையில் 3 வெள்ளிகளை வைத்துக் கொண்டு சொன்னார்களாம்." எனக்கொரு கனவுண்டு,..இந்த உலகில் ஏழை எளியோரைக்கு பணிவிடை செய்யும்/காக்கும் கனவு" என்று. அப்போது அவரை எள்ளி நகைத்தவரிடம் மிகத் தெளிவாக மிக கனிவாக சொன்னாரம் "கனவு என்னுடையது அதை நிறைவேற்றும் கடமை ஆண்டவர்க்குரியது, அவர் துணையுடன் என் கனவைச்செவ்வனே செய்து முடிப்பேனேன்று."

அன்னைஅவர்கள் அல்லவா உண்மையான ஹீரோயின் . பல் துலக்க பன்னீரும், குளிக்க பிஸ்லரியும் கேட்கும்,..டாக்டர் ஆகிருப்பேன்,..கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சிருப்பேன்னு பீலா விடும் ஹீரோயின் ஹீரோக்களின் துதிகளை எப்போது விடுவோம்.

ஹீரோவின் விளக்கம் என்ன தெரியுமா "ஒருசாதரண மனிதன் அசாதரணக் காரியத்தை(நல்ல) செய்ய விழையும்/துணியும் போது ஹீரோ ஆகிறான். "

ஆமானுஷ்ய சக்திகள் படைத்தவனல்ல ஹீரோ,..அவன் காமிக் புக்குகளில் ஸ்பைடர் மேனாகவும், மாயாவியாகவும், சூப்பர் மேனாகவும் குழந்தைகளுக்கு பூச்சாண்டிக் காட்டிக் கொண்டுருப்பவன்.

அன்னையைப் போல இன்னும் பலர் தாம் வாழ்வின் உண்மையான ஹீரோ!!!

இவர்களைப் பற்றி நாம் எப்போது இளையவர்களுக்கு சொல்லித்தரப்போறோம்...இல்லை நமக்குச்சொல்லும் அளவுக்குத்தான் இவர்களைப் பற்றித்தெரியுமா?

குழந்தைகளுக்கு ரோல் மாடல்களை வெளியில் தேடுவானேன் நாமே ஏன் ஒரு ஹீரோவாகாக் கூடாது,....?

8 comments:

  1. //ஒருசாதரண மனிதன் அசாதரணக் காரியத்தை(நல்ல) செல்ல விழையும்/துணியும் போது ஹீரோ ஆகிறான்//

    நல்லா இருக்கே!

    ReplyDelete
  2. //குழந்தைகளுக்கு ரோல் மாடல்களை வெளியில் தேடுவானேன் நாமே ஏன் ஒரு ஹீரோவாகாக் கூடாது,....?
    //

    உள்ள பிரச்சனையே தம்மை முன்னிறுத்திக்கொள்ள முயலாத மனப்பான்மைதான் !

    எப்போதுமே மற்றவர்களை ஹீரோக்களாக நினைத்துதான் வியந்துக்கொண்டிருக்கிறோம் :(

    ReplyDelete
  3. நல்ல ஒரு சிந்தனை. ஆணித்தரமான சிந்தனை. ஆழ்ந்த கருத்து! உன்னோட வேறு விதமான சிந்தனைக்கு ஒரு மலர் கொத்து.

    Have you seen any beauty shows? Its almost a fashion for any beauty to refer Annai therasa as the role model in their talent round. Has anyone implemented it in their practical life?

    You are right about it, atleast the next generation should realize that the 'role model' really means emulating the well nature of the person.

    Well done Devi.....

    ReplyDelete
  4. நல்லா சொன்ன போ!
    எங்க தேரேசா பேர் சொன்னா நம்மலயும் பியுடி பேஜன்ட் கனக்கா பார்பாங்களோன்ற பயத்ல மத்தவங்களும் யோசிக்ராங்க!
    நம்ம அடுத்த ஜெனரேஸனுக்காவது சின்ன வயசிலேயே உதவும் மனப்பான்மய சொல்லி கொடுக்கனும்..

    ReplyDelete
  5. Pesuvathu ezhidhu.

    ReplyDelete
  6. Anony Sir/Madam,..why don't you take a first step by leaving comment with your name..May be if you try things would fall into places :)

    ReplyDelete
  7. அட.. கலக்கல் பதிவு!! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    //குழந்தைகளுக்கு ரோல் மாடல்களை வெளியில் தேடுவானேன் நாமே ஏன் ஒரு ஹீரோவாகாக் கூடாது,....?
    //

    வாஸ்தவமான கேள்விதான். எல்லாக்குழந்தைகளுக்கும் அவங்க பெற்றோர்கள் தான் முதல் ஹீரோன்னு சொல்வாங்க. அதுக்கப்புறம் அவங்க அதிகம் நெருங்கி பழகுறவங்களைத்தான் ஆதர்சமா எடுத்துக்க முயற்சிப்பாங்க.

    (எ.கா. நான் எங்க ஊர் போஸ்ட் மேனை பார்த்து நானும் போஸ்ட்மேனாகனும்னு நினைச்சதுண்டு)

    அதுக்கப்புறம் சினிமா, டிவின்னு நம்ம ஆதர்சத்தை மாத்திடுது. என்ன செய்ய.. இருந்தாலும் குழந்தைகளுக்கு கஷ்டம் இல்லாம எதை கத்து கொடுத்தாலும் நல்லதுதாங்கறது என் எண்ணம்.

    நன்றிங்க

    ReplyDelete

வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்