- ஹே,..மன்னிச்சுக்கோப்பா
- சாரி,..... :-(((
- தெரியமாச்செய்துட்டேன்...நிஜம்மா
- மாப்பு கேட்கறேங்க
- சாரி கேட்டோ.. (மலையாளம்)
- ஷெமிக்கு..........(மலையாளம்)
- சாரியண்டி........(தெலுங்கு....நமக்கு தலைவர் சொன்ன "இப்புடுச் சூடு"க்கு மேல தெலுங்கு தெரியாது :-)
- பகுத் சாரி.... .....(ஹிந்தில சாரிக்கு என்ன? "ஷுகிரியா?" "தன்யவாத்"? ஹி.. ஹி ,..மே நோ ஹிந்தி ஆத்தா ஹை! :))) )
என்னடா,..திடீர்ன்னு மன்னிக்கச்சொல்றாளேன்னு நீங்க டெரர் ஆகிறது தெரியுது. அதுக்கு முன்னால ஏன் இப்படி ஒரு தலைப்புல பதிவு போட தோணுச்சுன்னா...ஏன் தோணுச்சுன்னா..?அச்சட்ச்சோ ...எப்படி தோணுச்சு.:-(,..சும்மா மானவாரியா அப்படியே ரோசிச்சப்ப இப்படி தோணுச்சுன்னு கதை சொல்ல மாட்டேன்,..இது ரொம்ப நாள ஓடிட்டு இருந்த ரோசனை தான். (ஆமா,..நாங்களும் சிந்திப்போம்லா..:-)
சரி விஷயத்துக்கு வாரேன்.
இப்ப யார பார்த்தாலும்,....
- "இந்த வாழ்க்கை ரொம்ப டென்ச்னா இருக்கு,.."..
- "டைம் இல்ல,."..."ரொம்ப வேலை,..".
- "செம கடியா இருக்கு,..".."ஆபிஸ்ல ரப்ச்சர் தாங்க முடியல,.."...
- "சே! இதுக்கு "நான் கடவுள்" ருத்ரன் மாதிரி "அஹம் பிரம்மாஸ்மி"ன்னு போகலாம் (ஆனா,அதுக்கு முடி நீளமா வளர்க்கணும்.அப்பறம் டை வேற அடிக்கணும் :-) )",..
- "என்ன உலகம் அங்க கொல்றாங்க,..இங்க சுருட்றாங்க,.அது,..இதுன்னு,..."
அதாவது நமக்கே தெரியாத "அந்த" ஒரு காரணத்த சொல்லுவோமா? "நான் என் வாழ்க்கைல சில, பல பேர்களை மன்னிக்கல!..அவங்க செய்தத மறக்கல" அப்படீங்கற காரணத்த.
என்னது,...மன்னிப்புக்கும் மனுஷ தினசரி வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்" ங்றீங்களா? இருக்கே..... எனக்கு தெரியுமே...ஆமா..நானே கண்டுபிடிச்சேன். ")))
"வந்துட்டாய்ய உளவியல் நிபுணரு,..காசு வாங்காமா கன்சல்டிங்க் பண்ண"ன்னு கிண்டல் பண்றவங்களுக்கு நான் பணிவ சொல்றதெல்லாம் இது தாங்க. நான் என் வாழ்க்கைல கஷ்டம் தந்த முக்காவாசி பேர மன்னிச்சிட்டேன்,..மிச்ச காவாசி பேர மறந்துட்டேன்....(சாமி புண்ணியத்துல இப்ப எனக்கு கூட இருக்கிறவங்களெல்லாம் நல்லவங்க தான் :))
இப்பக் கூட சில பேர் சொல்லலாம் "ஓ,..இப்படிக் கூட தன்ன பத்தி பெருமையா தம்பட்டம் அடிச்சிக்க முடியுமான்னு". அவங்களுக்கு நான் சொல்ற்தெல்லாம் "அன்புடையீர்,.தினம் தினம் சமைக்கிறோம்,..வெங்காயம் வதக்கிறப்போ,..அந்த பதார்த்ததுக்குத் தேவையான உப்பப் போட்டு வதக்கினா சீக்கிரம் வெங்காயம் வெந்திடுமுன்னு தெரிஞ்சா நாம நாலு பேருக்கு சொல்ல மாட்டோமா...? சொல்லுங்க? நான் சொல்லுவேன்பா...:-) ( வெங்காயத்த வதக்கிறப்பல்லாம் என்ன நினைச்சாலும் நினைச்சுப்பாங்க..:)
சரி சரி மன்னிக்க வருவோம்...
வாழ்க்கை ரொம்ப சீக்கரம் சீக்கரம ஓடிக்கிட்டு இருக்கு. இல்ல, இல்ல பறந்துகிட்டு இருக்கு. இதுல சும்மா தேவை இல்லாம வருத்தத சுமந்துகிட்டு. சந்தோஷமா இருக்கத் தான வாழ்க்கை? கடவுள் எவ்வளவு ரசிச்சு, ரசிச்சு இந்த உலகத்த, உங்கள படைச்சிருக்கார், "என்ஜாயா போடுறத விட்டுட்டு" சும்மா,..ஏன் மத்தவங்க நமக்கு பண்ண தப்பையே நினைச்சு நம்மளேயே நாம ஏன் தண்டிக்கனும் சொல்லுங்க?
"REVENGE IS SWEET"ன்னு சொன்னவன்னு மன்னிக்க பழகிருந்தா என்ன சொல்லிருப்பார் தெரியுமா? "FORGIVING IS BLISS"ன்னு :-)
இந்த உலகத்துல புதுசா வரப் போற பிரச்சினையின்னு எதுவுமேயில்ல. எல்லா பிரச்சனையும் ஏற்பட்டாச்சு. எல்லாத்துக் குரிய தீர்வுகளும் கண்டுபிடிச்சாச்சு..அதுல ஒரு அருமையான தீர்வு "மனுஷன் சந்தோசமா இருக்க தேவை மன்னிக்கும் மனப்பான்மை".
2000 வருஷத்துக்கு முன்னாலயே, ஏசு சாமி என்ன சொன்னாரு "ஒருத்தன் ஒரு கன்னத்துல அடிச்சா இன்னொரு கன்னத்த காண்பி"ங்கறாரு. மன்னிச்சிரு,..ஒரு சான்ஸ் கொடுன்னு சொல்றாரு.
மனசத் தொட்டு சொல்லுங்க "உங்கள யாரோ, இப்ப நீங்க கூட, மன்னிக்க முடியாத விஷயத்த மன்னிச்சிருக்காங்க தானே?"...ஹேய்,..பொய் சொல்லக் கூடாது,....:-)
அப்போ ...சின்ன வயசுல...அந்த சம்பவம்,..ஞாபகம் வருதா...? நல்லா யோசிங்க வரும் வரும்.. :-)))
சரி இவ்வளவு சொல்லியும் புரியலைன்ன,..நம்ம உலக நாயகன் கமல் விர்ர்ர்ர்ர்ருமாண்டீல சொன்னத சொல்றேன்,..
"மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன் (மன்னிப்பு கேட்கறவன் பெரிய மனுசன் (இல்ல வீரன் :))))
மன்னிச்சு எல்லோரும் மனுசனாவோம்,..வாங்க :-)))
(முடியாதுன்னு பின்னூட்டம் போடறவங்களெல்லாம்,..ஏலியன்ஸ் :( )
தப்பா ஏதாவது சொல்லிருந்தா மன்னிச்சிப்போட்டுருங்கண்ணா..வாரேன்ன்ன்!!!
டி.ஸ்.கி
மன்னிப்பத் தவிர இன்னொரு விஷயம் வாழ்க்கைய சுவாரசியம் ஆக்குமே, :-)அது என்ன..?
அது தாங்க, பாதி கோலிவுட் படத்தோட கதை அவுட்லைன்... YES,..பரத் சந்தியா நடிச்ச மேட்டர்...ம்ம்..கரெக்ட்,..காதல் ....(ஊய்,...ஊய்...நீங்க சீட்டி அடிக்கிறது கேட்குது,...ஆனா,..அது இன்னொரு பதிவுல :)))
//ஒரு தலைப்புல பதிவு போடணும்ன்னு தோணுச்சு//
ReplyDeleteரைட்டு :)
//சாமி புண்ணியத்துல இப்ப எனக்கு கூட இருக்கிறவங்களெல்லாம் நல்லவங்க தான் :))//
ReplyDeleteஹைய்ய்ய்ய் நானும் உண்டு நானும் உண்டு :))
//அன்புடையீர்,.தினம் தினம் சமைக்கிறோம்,..வெங்காயம் வதக்கிறப்போ,..அந்த பதார்த்ததுக்குத் தேவையான உப்பப் போட்டு வதக்கினா சீக்கிரம் வெங்காயம் வெந்திடுமுன்னு தெரிஞ்சா நாம நாலு பேருக்கு சொல்ல மாட்டோமா...? சொல்லுங்க? நான் சொல்லுவேன்பா...:-)///
ReplyDeleteஆஹா இந்த சூட்சுமம் தெரியாம நான் வெறுமனே போட்டு இத்தினி நாளும் வதக்கியிருக்கேனே :((
தகவலுக்கு நன்றி ஆனாலும் இந்த விசயத்தை இம்புட்டு லேட்டாவா சொல்லுவீங்க :(
//வாழ்க்கை ரொம்ப சீக்கரம் சீக்கரம ஓடிக்கிட்டு இருக்கு. இல்ல, இல்ல பறந்துகிட்டு இருக்கு. இதுல சும்மா தேவை இல்லாம வருத்தத சுமந்துகிட்டு. சந்தோஷமா இருக்கத் தான வாழ்க்கை?//
ReplyDelete100த்துல 1 வார்த்தை !
//மன்னிச்சு எல்லோரும் மனுசனாவோம்,..வாங்க :-)))//
ReplyDeleteநாந்தான் பர்ஸ்ட்டு வந்தேனாக்கும் :)
ஆயில்யன் said...
ReplyDelete//ஹைய்ய்ய்ய் நானும் உண்டு நானும் உண்டு :))//
கட்டாயமா...எத்தன பேருக்கு உங்க நட்பு கொடுப்பினை இருக்கும்
//ஆஹா இந்த சூட்சுமம் தெரியாம நான் வெறுமனே போட்டு இத்தினி நாளும் வதக்கியிருக்கேனே :((
தகவலுக்கு நன்றி ஆனாலும் இந்த விசயத்தை இம்புட்டு லேட்டாவா சொல்லுவீங்க :(//
இதுக்கு தான நாங்க இந்த தளத்த ஆரம்பிச்சிருக்கோம் :))
http://ammakairusi.blogspot.com/
//நாந்தான் பர்ஸ்ட்டு வந்தேனாக்கும் :)//
அப்போ நீங்க தான் "ஆதி மனுசன்" :)))
ippo naan thaan last apdinna naan enna list la varuvaen.... ????
ReplyDelete//**ivingobi said...
ReplyDeleteippo naan thaan last apdinna naan enna list la varuvaen.... ????**//
neenga last illa,..secondu...athanala neengalum manushan thaan :))),..apram mannikara kunam irukkulla? appo kattayaama manushaney thaan :))))
விஜயகாந்த் style-அ சொல்லணும்னா - " தமிழ்-ல ஐய்யோ Sorry Sorry, எல்லா மொழிகள்-ஐயும் எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை "மன்னிப்பு"!
ReplyDelete// நான் என் வாழ்க்கைல கஷ்டம் தந்த முக்காவாசி பேர மன்னிச்சிட்டேன்,..மிச்ச காவாசி பேர மறந்துட்டேன்.... //
- இந்த இடத்தில அசத்திட்ட போ! கொஞ்சம் ஆழமா யோசிச்சு பார்த்தா அது எவ்வளவு உண்மைன்னு புரியுது....
Well done Devi...
அப்புறம் அடுத்த topic படிக்க இப்போவே நான் ready ஆயிட்டேன்! சீக்கிரம் சீக்கிரம், Cant just wait....! அது கோலிவுட் அவுட்லைன் மட்டும் இல்லப்பா, இந்த உலகத்துல இருக்கிற ஜீவராசிகள் எல்லாம் வாழ்க்கையில ஒரு தடவையாவது experience பண்ணினதுவுங்கூடத்தான்........! யாராவது இல்லவே இல்லன்னு சொல்லி பார்க்கட்டும்....... அவ்வளவுதான்!
I agree that it takes a big heart to forgive someone although I don't think forgiving is the ultimate thing one can do. Some times it takes more than forgiving to change the other person. Some peoples act requires us to punish them and some requires just a good piece of mind. I guess it all comes down to doing the right thing for that situation.
ReplyDelete