சினிமாவும் நானும் பகுதி எழுதனும்னு நினைச்சவுடனயே எனக்கு கெக்கபிக்கேன்னு சிரிப்பு தான் வந்துச்சு. அப்பறம் நான்
பெரிய பாலசந்தர், பாலுமகேந்திரா என்னுடைய சினிமா அனுபவங்கள தொகுத்து
வழங்கறதுக்கு... ஆனாலும் சொல்லுவேன் J உங்களுக்கு பிடிக்குமென்ற நம்பிக்கையில்...( நம்பிக்கைய விட நப்பாசை தான்
சரியான வார்த்தை J)
சரி எல்லாரும் மேல பாருங்க...ஸ்ஸொய்ங்... ஸ்ஸொய்ங்...(ஃப்ளேஷ்பேக் அது
இல்லாமா சினிமாவா..J)...
இல்லைனா இந்த படத்தப் பாருங்க (படத்தப் பார்த்து தலைய சுத்தி வயத்தப் புரட்டினா
நான் பொறுப்பில்லப்பா)
அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு...சும்மா
நாலுன்னு வச்சிக்கோங்களேன். கிராமத்தில இருந்து எங்க பாட்டி அதாவது என் அப்பாவை
பெற்ற அம்மா வருவாங்க. “அப்பத்தா”ன்னு தான் கூப்பிடனும் நான் ரொம்ப ஒல்ட்
ஃபேஷனாருக்குன்னு பாட்டி தான் கூப்பிடுவேன்.
இப்ப நடிகர் சூர்யா விஜய் டிவில அவங்க
பாட்டிய “ஆத்தா”ன்னு கூப்பிடுவேன்னு ஸ்டைலா சொல்றப்ப தான்
தோணுது மிஸ் பண்ணிட்டோமோன்னு.
அந்த பாட்டி வீட்டுக்கு வந்தா எனக்கு செம ஜாலி பல
காரணங்களுக்காக
கிட்டத்தட்ட அவங்க எனக்கு ம்யூசியம் மாதிரி. அவங்கள சும்மா
வளைச்சு, வளைச்சு தொட்டு தொட்டுப் பார்த்து, கேள்வி மேல கேள்வி கேட்டு ஆராய்ச்சி
பண்ணுவேன்.
2. அடுத்த காரணம் வித்தியாசமான கிராமத்துக் கதை
சொல்லுவாங்க. எந்த குழந்தைங்க புத்தகத்திலயும் வரதா,..வர முடியாத சமூக நீதிக்
கதைகள். உ.தா. ராசாவுக்கு துரோகம் பண்ணின ராணி. அதக் கண்டுபிடிச்ச
மந்திரி...இப்படி J
3 3. பேத்தின்னு பார்க்கமா என்னை ரொம்ப வம்பிழுப்பாங்க. சினிமா தமிழ்ல சொல்லனும்னா கலாய்ப்பாங்க..
4
4.ஆனா இதெல்லாம் விட அவங்க வரவ நான் ரொம்ப
எதிர்பார்த்துக் கிடக்கிரது எதுக்கு தெரியுமா...சினிமா...:-) (அப்பாடா,..டாப்பிக்கிக்கு
வந்துட்டேனா..J )
பாட்டிக்கு நான் தான்
சினிமா கம்பேனியன். அதுவும் செக்ண்ட் ஷோ தான் போவோம். அதுக்காகவே,..தூங்காம
முழிச்சிருப்பேன். பாட்டி சாப்பிட்டு முடிச்சு, வெத்தலப் போட்டு அப்பாக் கிட்ட
எல்லாக் கதையும் பேசி ஒரு மாதிரி ட்ன் ஃபோர் த டே (Done For The Day) ஆகும் போது பாட்டி சினிமா போக
ரெடியாவாங்க. அவங்க பின்னாலயே திரிவேன். எங்க விட்டுட்டுக்கிட்டுட்டுப்
போய்ட்டாங்கன்னா. அம்மாவும் எப்படின்னு தெரில என்னைய ஓண்ணும் சொல்லாம அவங்க கூட
அனுப்பி வைச்சிருவாங்க.
ஆனா இதுல ஒரே ஒரு
பிராப்பளம் பாட்டி லைக்ஸ் ஒன்லி பிளாக் & ஓயிட் மூவீஸ். நான் கலர் படம்
மட்டும் தான் பார்ப்பேன்.
“நாம தான் ஃபிரியாக் கொடுத்த ஃபினாயிலக் கூடக்
குடிப்போம்லா J...” இப்படி சொல்வேன்னு நினைக்காதீங்க.
பாட்டி கூட சினிமா போற அனுபவம் ரொம்பவும் அலாதியானது. அதுக்காகத்தான் கண் முழிச்சு காத்திருந்து போவேன்....
பாட்டி கூட சினிமா போற அனுபவம் ரொம்பவும் அலாதியானது. அதுக்காகத்தான் கண் முழிச்சு காத்திருந்து போவேன்....
ஏன் அலாதியானதுன்னு
அடுத்த பதிவுல சொல்றேன்...
No comments:
Post a Comment
வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்