ஆத்தாளுக்கு...
தென்னமரக்குடியெண்ணை!
அய்யனுக்கு...
டீக்கடை பாக்கிப்பணம்!
அக்காளுக்கு...
மச்சான் வாங்கி தராத
சிவப்பு வளவி!
அவ பெத்த மகராசனுக்கு...
பிசுபிசுக்கும் பப்பர மிட்டாய்!
பீடி சுத்திய சம்பளக்
காசில்,
கச்சிதமாய் கணக்குப்
போட்டவள்...
ஒரு கிலோ சீனி
மிட்டாயும், சேவும் வாங்க
ஒடிக் கொண்டிருந்தாள்...
பக்கத்து வீட்டுச் செல்வி வழியில்
“ஏ புள்ள டவுனலேர்ந்து, உன் மாமன் வந்துருக்கு”ன்னுச் சொல்லக் கேட்டு
ஐ.டி.ஐ படித்து விட்டு, ஐ.ஐ.டி
படித்தது போல
இவளைக் கட்டிக்க மறுத்த அந்த கெளரதை மாமனுக்கு...!!!
No comments:
Post a Comment
வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்