Thursday, March 15, 2012

அர்த்தராத்திரி ஊர்வலம்



கவிதையா...?
அவனைப் பற்றியா...???
சத்தியமாக அவன் பெயரைக் கூட உச்சரிக்க கூடாதென
எழுந்து எட்டி நடை போட்டேன்....அலட்சியமாய்.

மெதுவாய் ஒரு குட்டிக் கவிதை,
தவழ்ந்து வந்து ஒட்டிக் கொண்டது....

கண்டும் காணததாய் இன்னும் வேக நடை போட்டேன்
தர தரவென என் கால் பிடித்து
மண்ணில் புரண்ட படி அழுது முரண்டது...
பாவமென தூக்கி இடுப்பில் இடுக்கிக் கொண்டேன்!

இன்னும் சில அடியில் ....
ஒரு செல்லக் கவிதை மெல்ல அடிப்போட்டு
கையைக் கட்டிக் கொண்டது...
சரி வந்து தொலையட்டுமென விட்டு விட்டேன்!

பின் ஒரு கவிதை தோள் அணைத்துக் கொண்டது,...
ஒன்று கழுத்தைக் கட்டிக் கொண்டது...
இன்னுமொன்று முகத்தோடு முகம் இழைத்தது..

இப்படியாய் கழிந்த அடுத்த சில நொடிகளில்
அந்த நிசப்த இரவில்....
ஒராயிரம் கழிவிரக்க கவிதைகளோடு ஊர்வலம் போய்க் கொண்டிருந்தேன்...ஒற்றையாய்

6 comments:

  1. தமிழ் லிபி சோதிப்பு

    ReplyDelete
  2. the pic of the girl is awesome... her face turned towards other side, shows she is totally lost in thoughts.

    navena peNNay irupinum, uNarchikal ondrE!
    konja naeram kanaa kandaal, athu kavithai!
    neenda naeram sinthithaal, avanoe avalae asylum sella naerkirathu
    ithu vinthai!

    ReplyDelete
  3. Very nicely written.
    கணினி புழங்கும் பெண்ணின் மனதிலும் தமிழ் கவி அழகாக புழங்குறது. வாழ்த்துக்கள் தேவி!.

    ReplyDelete
  4. @ Manimegalai - மிகச் சரியாகச் சொன்னீர்கள் மணிமேகலை
    @ Vishnu - கணினினி புழங்கினாலும் மனம் உழலுவது என்னவோ தமிழில் தானே  உங்கள் அன்புக்கு நன்றி விஷ்ணு

    ReplyDelete

வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்