Saturday, February 28, 2009

சினேகம்,..நட்பு,..தோழமை,..

நட்ப பத்தி புதுசா நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லங்க...காதல்,..தாய்மை மாதிரி அதுவும் அலாதியான பிரியத்தைச் சொல்ற,.. சொல்ல.. கடவுள் தந்த வழி, வரம்.

நட்பு என் வாழ்க்கையில ஏற்படுத்தின மாற்றங்கள் ஏராளம். ஒரு சங்கோஜமும் இல்லாம உள்ளதை உள்ளபடிச் சொல்லி சிரிக்க,.. மகிழ,.. திட்ட,.. திட்டு வாங்க..நட்பில் மாத்திரம் தான் சாத்தியப்படும்.

எங்கேயாவது "என் ஃபிரண்ட் என் அம்மா மாதிரி " இல்லைனா "என் ஃப்ரண்ட் அப்பா மாதிரி"ன்னு சொல்ல கேட்டுருக்கீங்களா...ம்ம்..90% கேட்டுருக்க மாட்டீங்க.

ஆனா 100% "என் அம்மா என் ஃப்ரண்ட் மாதிரி" "என் மனைவி என் ஃப்ரண்ட் மாதிரின்னு" யாரவது சொல்ல கேட்டிருப்பீங்க. அது ஏன் கிறிஸ்துவர்கள் "ஏசு, என் நண்பர்" ன்னு கடவுளயே நம்ம வட்டாரத்துக்குள்ள எல்லாருக்கும் எளிதா புரியற மாதிரி ஒரு ஆழ்ந்த உறவச் சொல்லற இலக்கணமா, உவமையா இருக்குதுங்க இந்த நட்பு

அம்மா,...தாயே..இந்த கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும்,..மேட்டருக்கு வான்னு நீங்க சொல்றது கேட்குது..இதோ வந்துட்டேன் வந்துட்டேன்...அப்படி Friends எனக்கும் இருக்கு..ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு இடம் கொடுத்து ஓய்யாராம உசரத்துல உட்கார வச்சிருக்கேன்...ஆனாலும் இப்ப நான் சொல்லப் போற நட்பு கொஞ்சம் வித்தியாசமானது. படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க

2004ல நவம்பர் மாதம் திருமணமானப் பின் நான் தனியா இந்தியா போய்கிட்டு இருந்தேன்.(சரி, சரி..தனியானா தனியா இல்ல Flightல பெயர் தெரியாத பல பேர்களோட)

லுஃப்தான்சா விமானம் ஃப்ரங்க்ஃப்ர்ட்ல இருந்து கிளம்பறப்போ, பக்கத்துல யாரு உட்காராங்கன்னு கூட பாக்காம நான் செம தூக்கம்.

தூக்கத்துல நான் கை வைக்கற Arm Restல எனக்கும் பக்கத்து சீட்டுகாரர்க்கும் ஒரு சண்டை. சண்டைனா சண்டை இல்ல.அதாவது நான் Arm Restல கைவப்பேன்..ஆனா அவர் நான் வைக்கறத்துக்குள்ள.வைச்சிடுவாரு..இப்படி மாத்தி மாத்தி Arm restக்கு சண்டை போடுறோம்னு தெரியாம போட்ட ஒரு சண்டை.


கடுப்பாகி தூக்கம் முழிச்சுப் பார்த்த ஒரு பையன். சின்னப் பையன் இல்ல என்ன விட ஒரு வயசோ இரண்டு வயசோ குறைஞ்ச பையன், அப்படியே தமிழ் நாட்டு ஜாடை.

நல்லா தூங்கிட்டு இருந்தாரு. ஆனா, என் தூக்கம் தான் தூக்கம் போச்சு. அவர் மேல Slightஅ கோவம் கூட வந்துச்சு. அப்பறம்...அவர் மட்டும் நல்லா தூங்கறாரே.

நான் aisle seat, இவர் Center, அப்பறம் ஜன்னல் பக்கமா Tieயெல்லாம் கட்டிகிட்டு ஜன்னலயும், கொடுத்த தலையணையும் கட்டிக்கிட்டு ஒரு நடுத்தர வயது உடைய ஒருத்தர் தூங்கிட்டு இருந்தார் (அவர் பெயர் மச்சக்காளை, அவர் பெட்டி அடுத்த Flightல் வருதுன்னு Air Hostess சொன்னப்ப note பண்ணினேன்)

அப்பறம் சாப்பாடு ஆரம்பிச்சாங்க...(எங்க அம்மா சின்ன வயசுல நான் 1 standardன்னு நினைக்கிறேன் திட்டனது ஞாபகம் இருக்கு,..வீட்ல எவ்வளவு வித விதமா பண்ணிக் கொடுத்தாலும் வெளி சாப்பிட ஏன் தான் இப்படி திரியிரியோன்னு. சாரிம்மா,.அப்பவும் அது உரயக்கல,..இப்பவும் தான் உரயக்கல. ஏன்னா, எங்கவாது சாட் கடைப் பார்த்துட்டப் போதும் ஏதாவது ஒரு சாட் ஐட்டம் சாப்பிட்டு போனா தான் என் மனசு ஆறும்.)


அப்போ தான் திருவாளர் கண் திறந்தார். நான் இங்க சாப்பாட ஒரு கட்டு கட்டிட்டு இருந்தேன். (அந்த சாப்பாடவான்னு...!!. நீங்க சொல்றது கேட்குது,..சாரி,..நான் சாப்பிடறப்போ யார் என்ன சொன்னாலும் கண்டுக்க மாட்டேன். எதையுமே Full concentrationஒட பணறது என் வழக்கம். அதுக்காக என்ன தின்னிப் பண்டாரம்னு நினைச்சிராதீங்க...டேஸ்ட் பாத்து இதுல உப்பு கம்மி, இது இப்படி, அது அப்படின்னு நொட்ட சொல்ல எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஹி..ஹி..ஹி..)

நானா மனசுல நினைச்சுக்கிட்டேன், இவர்கிட்டல்லாம் பேசக்கூடாதுப்பான்னு. அவர் மறுபடியும் தூங்கப் போய்ட்டார். அப்பறம் என்ன நினைச்சாரோ எழுந்துட்டாரு.

எப்படி ஆரம்பிச்சது தெரில (நான் தான் என் ஓட்ட வாய வச்சுகிட்டு ஏதாவது சொல்லிருப்பேன்)...ஒரே கதை, விவாதம், ...
@ இந்த தலயணை Down featherன்னு ஆரம்பிச்சு
@ நடிகர் சிவகுமார் எப்படி Gentlemanன்னு அவர் சொல்லி,..
@ அப்பறம் காந்தி தன் மகனோட காதல எதிர்த்தாருன்னு நான் சொல்லி,..ஏகப்பட்ட விஷயம் பேசினோம். அவர் மதுரை தான்னு சொன்னார். அப்பறம் email ids exchange பண்ணிக்கிட்டோம்.

அவர் சில நாட்களுக்குப் பின் மறக்காம் email பண்ணார். நான் தான் இந்த மாதிரி விஷயத்துல Firstஅ இருப்பேன். ஆனா அவர் முந்திக்கிட்டார். அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவர் ஒரு நல்ல தோழர்.

வருண் பிறந்ததுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துக்கள்,
எப்பவும் தன்னுடைய மின்னஞ்லில் மறக்காம வருணையும் அவங்க அப்பாவையும் நலம் விசாரிக்கிறது....

அவருடைய தந்தை எதிர்பாராமல் தவறியது,..அவர் உலகம் சுற்றும் வாலிபன் ரேஞ்சுக்கு பல நாடுகளுக்குப் போறதுன்னு...இப்ப சமீபமா அவர் திருமணம்ன்னு (Feb 8th)...Modern technologyல வளருது எங்கள் நட்பு!

அவருக்கும் அப்படியே..இப்படி அருமையான நட்பு அமைந்தது எதிர்பாராதது...
இந்த பதிவு கூட அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் திருமணத்துக்கு இது ஒரு நல்ல பரிசாவும் அமையும்ங்கற நினைப்போட இத பதியுறேன்

( "பதியுறேன்" தமிழ் வார்த்தையா?? :-O தமிழ் விற்பன்னர்கள் என்னை மன்னிக்கவும் :(  தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் உன் கண்ணக் குத்தன்னு சபிச்சிராதீங்க,..சாமியோவ்!)

ஆங்...ஒரு முக்கியமான விஷயம்...நண்பரின் பெயர் ஹரி பாஸ்கர், திருமதி ஹரி பாஸ்கரின் பெயர் கவிதா

"திருமண வாழ்த்துக்கள்! 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!"

சரி,..நட்பப் பத்தி ஒரு விஷயம் சொல்லி முடிச்சுக்கிறேன்
நல்ல நட்பு கடவுள் மாதிரி எல்லா இடத்திலயும் இருக்கு,..அது நம்ம ரஜினி மாதிரி எப்ப எப்படி எங்க வரும்ன்னுலாம் சொல்லமுடியாது.

அப்படி வந்தா, அது சிவாஜி மாதிரி இல்லாமா பாட்ஷா மாதிரி ச்சும்மா ச்சும்மா ச்சுத்தி ச்சுத்தி கலக்கும்...

என்ன வர்ர்ரட்டா?

டி.ஸ்.கி
இந்த பதிவுல என்னைப் பாதித்த பல நண்பர்களப் பத்திச் சொல்லல...அது ஒரு நீண்ட பட்டியல் பள்ளிக்காலத்து பாசமான தோழிகளிலிருந்து ஆரம்பிச்சு..இப்ப நேசமான ஆர்குட்??, FB வரை. அதில் அதிகமாய் இருப்பது ஆண் நண்பர்கள். இத சொல்ல எனக்கு எந்த வித தயக்கமும் இல்ல. நட்புக்கு நல்ல மனசும், நேர்மையும், Integrityயும்(integrityக்கு தமிழ்ல என்ன) தான் தேவை. ஆண், பெண், திருநங்கைன்னு பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது நட்புன்னு நான் நம்பறேன்....அப்போ நீங்க...

3 comments:

 1. Me first!!>..man you have no idea how it feels to be the first to post comment....

  Well Said Devi.....அது நம்ம ரஜினி மாதிரி எப்ப எப்படி எங்க வரும்ன்னுலாம் சொல்லமுடியாது.

  And hearty congratualtions to your friend

  ReplyDelete
 2. பொன்னத்தா அவர்களே,..நீங்க வந்தாவே பெரிசு..
  இதுல First, Secondலாம் போடாதீங்க. நமக்கு அத்தனை பின்னுட்டங்கள் போட ஆளில்ல..

  மற்றபடி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நன்றி :)

  ReplyDelete
 3. யக்கோவ்....நம்ம ஏரியா பக்கம் வந்துகினு போறியா

  கொஞ்சம் விவகாரம் இருக்கு

  http://sandaikozhi.blogspot.com/2009/03/blog-post_11.html

  ReplyDelete

வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்